Tuesday, February 12, 2013

2. உச்சரிப்பு - சில குறிப்புகள்

ஒரு மொழியின் உச்சரிப்பைக் கேட்பதன் மூலம்தான் அறிந்து கொள்ள முடியும். இது போன்ற எழுத்து மூலமான பாடங்களில் உச்ச்ரிப்பை விளக்குவது கடினம். ஆயினும் உச்சரிப்பு பற்றிய சில அடிப்படை விஷ்யங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

முதலில் எழுத்துக்களில் தொடங்குவோம்.

ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துக்கள் உள்ளன. இவை கேபிடல் என்றும், ஸ்மால் என்றும் இரு விதமாக எழுதப்படுகின்றன.

இது தவிர அச்செழுத்துக்கும் கையெழுத்துக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. எனவே எழுத்துக்கள்
கேபிடல் - அச்செழுத்து, கேபிடல் கையெழுத்து,
ஸ்மால் அச்செழுத்து, ஸ்மால் கையெழுத்து
என்று நான்கு விதங்களாக உள்ளன.

ஆயினும் இப்பொழுது கேபிடல் கையெழுத்து என்பது அநேகமாக வழக்கொழிந்து விட்டது. ஸ்மால் எழுத்துக்கள் மட்டும் இரண்டு விதமாக எழுதப்படுகின்றன. இவற்றில் சில எழுத்துக்களின் கையெழுத்து வடிவங்கள்  மட்டும் அச்செழுத்திலிருந்து பெரிதும் வேறுபடும். இவற்றை அடிப்படையிலிருந்து ஆங்கிலம் கற்பவர்கள் கூட விரைவிலேயே அறிந்து கொள்ளலாம்.

அச்செழுத்து, கேபிடல்
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

அச்செழுத்து, ஸ்மால்
a b c d e f g h I j k l m n o p q r s t u v w x y z

கையெழுத்து, கேபிடல்
A B C D E F G H I J K L MN O P Q R S T U V W X Y Z

கையெழுத்து, ஸ்மால்
a b c d e f g h I j k l  m n o p q r s t u v w x y z

26 எழுத்துக்களில்  a, e, i, o , u ஆகிய ஐந்து எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள். மற்ற இருபத்தோரு எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள்.

தமிழில் இல்லாத சில ஒலிக்குறிகள் ஆங்கிலத்தில் உண்டு. குறிப்பாக  'a' என்ற எழுத்து சில சமயம் 'அ' அல்லது ''ஆ என்றும், சில சமயம் 'எ' அல்லது  'ஏ' என்றும், வேறு சில சமயங்களில் 'அ'வுக்கும் 'எ' வுக்கும் இடைப்பட்ட ஒலியிலும் உச்ச்ரிக்கப்படும். இந்த இடைப்பட்ட ஒலியைத் தமிழில் எழுதும்போது சாய்ந்த எழுத்தாகக் குறிப்பிட்டிருக்கிறோம். இப்போது சில உதாரணங்களைப்பார்க்கலாம்.

அ -  Tamil, asset, arrest, allow, agree, accept, apply, appeal
ஆ- aunt, car, ball, dark, falls, garden, hall, jar
எ - paint, rain, saint, tail, sail, nail, snail, 
ஏ - April, ape, cane, baby, date, fate, game, hay, ray, jade
ஆ - ant, cash, bat, dam, gas, hat, jam, can

இந்தச் சொற்களின் பொருட்களை நாங்கள் இங்கே கொடுக்கவில்லை. பெரும்பாலானவை நீங்கள் அறிந்தவையாகத்தாதன் இருக்கும். புதிய சொற்கள் இருந்தால் அகராதியைப் பார்த்தோ, (ஆங்கிலம்) தெரிந்தவர்களிடம் கேட்டோ பொருள் அறிந்து கொள்ளவும்.


தமிழில் இல்லாத ஆனால் மற்ற இந்திய மொழிகளில் உள்ள ஒலிக்குறி மெய்யெழுத்துக்களின் வன்மையான / மென்மையான வடிவங்கள். தமிழில் மென்/வன் உச்ச்ரிப்புக்கள் இருந்தாலும் அவற்றுக்குத் தனி எழுத்து வடிவம் கிடையாது.

உதாரணமாக பலம், பல்லி என்ற சொற்களை எடுத்துக்கொண்டால் பலம் என்ற சொல்லில் ப என்ற முதல் எழுத்து வன் உச்ச்ரிப்பு கொண்டது. பல்லியில் உள்ள 'ப' மென் உச்ச்ரிப்பது கொண்டது.

ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதும்போது bulb, pulp  பல்ப் என்ற சொற்களை ஒரே மாதிரி பல்ப் என்றுதான் எழுத வேண்டியிருக்கும். ஆனால் இந்த இரண்டு சொற்களுக்கும் உச்ச்ரிப்பு வேறுவிதமானது. இந்த வேறுபாட்டை எடுத்துக் காடுவதற்காக் வன் உச்சரிப்பு உள்ள எழுத்துக்களைக் கருத்த எழுத்தில்(bold font) எழுதுவோம்.

bulb ல்ப்
pulp பல்ப்

இது தவிர தமிழில் இல்லாத இரண்டு உச்சரிப்புக்கள் ஆங்கிலத்தில் உண்டு.

ஒன்று zoo, zip, zoom போன்ற வார்த்தைகளில் வருகிறது. இதன் சரியான உச்ச்ரிப்புக்கு ஸ என்று உச்சரித்து, நாக்கின் மேற்புறமாகக்  காற்றை வெளிப்படுத்தும்போது வரும். இதை இந்தப் பயிற்சியில் நாங்கள்  (italics) என்று குறிப்பிடுவோம். இந்த உச்சரிப்பை,  திரும்பத் திரும்பக்  கேட்பதன் மூலமே சரியாக அறிய முடியும்.

மற்றொரு உச்சரிப்பு. F இதைப் பொதுவாக  தமிழ்ப் பத்திரிகைகள் ஃப என்று எழுதுவார்கள். நாங்களும் இதே முறையைப் பின்பற்ருவோம்.

ஸ, ஷ, ஜ, ஹ போன்ற எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் இல்லை என்றாலும் இவை தமிழில் பரவலாகப் பயன்ப்படுத்தப் படுகின்றன. பல ஆங்கிலச் சொற்களில் இந்த உச்சரிப்புகள் வரும்.



No comments:

Post a Comment